வெலிமடை தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வெலிமடை தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 7:35 pm

Colombo (News 1st) கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வெலிமடை தோட்டத்தில் இன்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

வெலிமடை தோட்ட தேயிலை மடுவத்திற்கு அருகில் கூடியிருந்த தொழிலாளர்களுக்கும் தோட்ட உதவி அதிகாரிக்கும் இடையில் இன்று முற்பகல் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனுமதி வழங்காத தோட்ட உதவி அதிகாரிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தொழிலாளர்கள் அவரின் மோட்டார் சைக்கிளை தடுத்து வைத்தனர்

பின்னர் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடபட விரும்பிய தமக்கு தோட்ட உதவி அதிகாரி அனுமதி வழங்கவில்லை எனவும் இதனால் தாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தோட்டத்தொழிலாளி ஒருவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்