விஷாலுக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு

விஷாலுக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு

விஷாலுக்கு எதிர்ப்பு: தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2018 | 5:31 pm

பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனும் கோரிக்கை அடங்கலாக பல்வேறு காரணங்களுக்காக விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.

நண்பகல் 12 மணியளவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்திற்குள் நுழைந்து கோ‌ஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்கள் வந்தபோது சங்கத் தலைவர் விஷால் அங்கு இல்லை. செயலாளர் கதிரேசன் தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். இதன்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டுப் போட்டு சாவியை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்