யாழில் அதிகரிக்கும் பாதீனியம் களையை அழிக்க மக்கள் நடவடிக்கை

யாழில் அதிகரிக்கும் பாதீனியம் களையை அழிக்க மக்கள் நடவடிக்கை

யாழில் அதிகரிக்கும் பாதீனியம் களையை அழிக்க மக்கள் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 9:43 pm

Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள பாதீனியம் களையை அழிப்பதற்கான நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் மேலதிகமாக 50 ஏக்கரில் பாதீனியம் களை பரவியுள்ளமை தெரிய வந்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 700 ஏக்கரில் காணப்பட்ட பாதீனியம் களை இவ்வருடம் 750 ஏக்கரில் படர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களினூடாக இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த 13 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக பாதினீயத்தை அழிக்கும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாய நிலங்களை பாதீனியம் ஆக்கிரமித்துள்ளமையால், பயிர்செய்கை குறைவடைவதாக விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்