பாராளுமன்ற மோதல் குறித்த காணொளிகள் பார்வையிடல்

பாராளுமன்ற மோதல் குறித்த காணொளிகள் பார்வையிடல்

பாராளுமன்ற மோதல் குறித்த காணொளிகள் பார்வையிடல்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 1:44 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் நிலைமை தொடர்பிலான அனைத்து காணொளிகளையும் நாளை (20) பார்வையிடுவதற்கு, விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமரா கட்டமைப்பில் பதிவாகியுள்ள காட்சிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சிகளை பார்வையிடவுள்ளதாக குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், குறித்த மோதலுக்கு காரணமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் மோதல் நிலைமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சபையில் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 3,30,000 ரூபா வரையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த மோதலுடன் தொடர்புடைய தரப்பினரை அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்