நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட குரல் பதிவுகள் மீட்பு

நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட குரல் பதிவுகள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 8:55 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் தகவல் வௌியிட்ட நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட சில குரல் பதிவுகள் மீள பெறப்பட்டுள்ளன.

குறித்த கையடக்கத் தொலைபேசியை ஹொங்காங்கில் சோதனையிட்ட பின்னரே குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குரல் பதிவுகள் மற்றும் விசேட அறிக்கை என்பன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன.

தமது பொறுப்பிலுள்ள குறித்த குரல் பதிவுகள் மற்றும் அறிக்கையின் பிரதி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்