தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக இரா. சம்பந்தன் தெரிவிப்பு

தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக இரா. சம்பந்தன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 1:33 pm

Colombo (News 1st) தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சபாநாயகர் தம்மை நீக்காததால், தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டில் இருப்பதாக இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்