by Staff Writer 19-12-2018 | 3:55 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கான நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி இராணுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
காணி கையளிப்பு ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி உத்தியோகப்பூர்வமாகக் கையளித்தார்.
கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 39.95 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த காணிகள் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான 5.33 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.