இந்திய மீனவர்களின் 7 படகுகள் மீள கையளிப்பு

இந்திய மீனவர்களின் 7 படகுகள் மீள கையளிப்பு

இந்திய மீனவர்களின் 7 படகுகள் மீள கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2018 | 4:23 pm

Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் 7 படகுகள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கரையோர காவல் படையினரின் ஒத்துழைப்புடன் அவை கையளிக்கப்பட்டுள்ளன.

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட படகுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் வைத்து இவை கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய கடற்படைத் தளங்களில் நங்கூரமிடப்பட்டிருந்தன.

இந்திய பொறியியலாளர்களால் குறித்த படகுகள் திருத்தப்பட்டதன் பின்னர் நேற்று (18) மாலை அவை கையளிக்கப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்