ஆளுங்கட்சியில் இணைந்தோருக்கு அமைச்சுப் பதவி இல்லை

ஆளுங்கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சுப் பதவி இல்லை: ஜனாதிபதி தீர்மானம் 

by Bella Dalima 18-12-2018 | 10:42 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு கூடியது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஆளுங்கட்சியில் அமர்ந்த விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது, ஆளுங்கட்சியில் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திர இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.