கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது

வாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது

வாள்வெட்டு, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழில் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 6:02 pm

Colombo (News 1st) பல்வேறு வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றத்தடுப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21 தொடக்கம் 24 வயதிற்குட்பட்ட 9 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 6 வாட்கள் உட்பட குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மானிப்பாய் , நீர்வேலி மற்றும் யாழ். நகரை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்