ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 5:23 pm

Colombo (News 1st) இஹல வட்டவளை மற்றும் ரொசெல்லவிற்கிடையில் ரயிலொன்று தடம்புரண்டதில் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அளுத்கமயில் இருந்து பண்டாரவளை வரை சேவையில் ஈடுபடும் ரயில் இன்று பிற்பகல் 1.45 அளவில் தடம்புரண்டதைத் தொடர்ந்து ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.

இதனால் பொடிமெனிக்கே ரயில் ரொசெல்ல ரயில் நிலையத்திலும், கொழும்பில் இருந்து சென்ற மற்றுமொரு ரயில் கலபொட ரயில் நிலையத்திற்கு அருகிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில்களில் பயணித்த பயணிகள் அங்கிருந்து பஸ்ஸில் பயணத்தை தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதை விரைவில் வழமைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்