முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி விடுவிப்பு

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 8:35 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பகுதிகளில் இராணுவம் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,523 ஏக்கர் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 69 ,754 ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 263 ஏக்கர் காணி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்