மும்பை மருத்துவமனையில் தீ பரவல்:  2 மாதக் குழந்தை உள்ளிட்ட 8 பேர் பலி

மும்பை மருத்துவமனையில் தீ பரவல்: 2 மாதக் குழந்தை உள்ளிட்ட 8 பேர் பலி

மும்பை மருத்துவமனையில் தீ பரவல்: 2 மாதக் குழந்தை உள்ளிட்ட 8 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2018 | 5:35 pm

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழந்துள்ளனர். 2 மாதக் குழந்தையொன்றும் இதன்போது உயிரிழந்துள்ளது.

தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட குறித்த வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்