போலி கடிதத் தலைப்புகளை பயன்படுத்தியவர் கைது

போலி ஜனாதிபதி செயலக கடிதத் தலைப்புகளை பயன்படுத்தியவர் கைது

by Staff Writer 18-12-2018 | 3:50 PM
Colombo (News 1st) போலியான முறையில் அச்சிடப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்புகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஆசிரியர் என்ற போர்வையில் புலமைப்பரிசில் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்து போலியான கடிதங்களை அனுப்புவதற்கு கடிதத் தலைப்புகளைப் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர் குறித்து கிடைத்த தகவலுக்கு அமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்