கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து பண மோசடி: ​பெண் கைது

கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து பண மோசடி: ​பெண் கைது

கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து பண மோசடி: ​பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 3:58 pm

Colombo (News 1st) தொழில் நிமித்தம் கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவகமுவ பகுதியில் வாடகை அறையொன்றில் மறைந்திருந்த போதே, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

46 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு 51 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பதில் 350 கிராம் நிறையுடைய தங்காபரணங்கள், 50 ATM அட்டைகள், 50 வங்கிக் கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், 72 கடவுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்