ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் ஆளும் தரப்பில் அமர்வு

ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் ஆளும் தரப்பில் அமர்வு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2018 | 3:38 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும் தரப்பில் அமர்ந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க மற்றும் லக்‌ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் ஆளுங்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.

அத்துடன், அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகேவும் இன்று ஆளுந்தரப்பில் அமர்ந்து கொண்டார்.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீரவை எதிர்கட்சியின் பிரதம கொரடாவாகவும் நியமிப்பதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்