இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை

by Staff Writer 17-12-2018 | 6:56 PM

பண்டிகை காலத்தில் பெருந்தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனங்களில் வருகை தருபவர்கள் முக்கிய நகரங்களின் பெருந்தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான நகரங்களில் அநாவசிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத்திற்கிணங்க, குறித்த வாகனங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை அகற்றுவதற்கு செலவாகும் தொகையை வாகன உரிமையாளர்களிடமிருந்து அறவிடவுள்ளதாகவும், வாகனங்களை அகற்றும் போது ஏற்படும் சேதங்கள் தொடர்பில் எந்த பொலிஸ் அதிகாரியும் பொறுப்பேற்க மாட்டார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.