அரசியல் முன்னெடுப்புக்களை மதிப்பதாக ஐ.ஒ அறிக்கை

அரசியல் முன்னெடுப்புக்களை மதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

by Staff Writer 17-12-2018 | 6:51 PM

நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக சுமூகமாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வு கண்டமைக்கு நிலையான நண்பர் என்ற ரீதியில் மதிப்பளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும்  சுபீட்சத்தை நாட்டில் நிலைநாட்டுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சபை வௌியிட்டுள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சம்பிரதாயத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை - பசுபிக் பிராந்தியத்தில் பெறுமதிமிக்க பங்குதாரர் எனவும், நாட்டுடனும் நாட்டு மக்களுடனான உறவையும் தொடர்ந்தும் பேண எதிர்ப்பார்ப்பதாக இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் Alaina Teplitz டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.