388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்  பெண்ணொருவர் கைது

388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2018 | 8:10 am

தெஹிவளையில் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் வௌிநாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

23 வயதான பங்களாதேஷ் பெண்ணொருவரே ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த யுவதியை சோதனையிட்ட போது, ஒரு கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது,

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், இரத்மலானை பகுதியில் யுவதி தங்கியிருந்த விடுதியிலிருந்து மேலும் 31 கிலோகிராம் 329 கிராம்ட ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்