ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்பு

ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்பு

ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2018 | 7:58 am

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று 5 ஆவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்றதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க, நிலவும் அரசியல் நிலைமை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்