முதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து முன்னிலையில்

முதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து முன்னிலையில்

முதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து முன்னிலையில்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2018 | 10:01 pm

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 29 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

நிரோஷன் திக்வெல்ல இறுதிவரை களத்தில் நின்று 80 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள , இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 282 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

டிம் சவ்தி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து 59 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் டொம் லெதம் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்காக 162 ஓட்டங்களை பகிர்ந்து நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்டது.

கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் டொம் லெதம் டெஸ்ட் அரங்கில் ஏழாவது சதத்தை எட்டினார்.

நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களை பெற்றிருந்த போது இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்