சுமந்திரன் ஐ.தே.கவின் ஆதரவாளரா? – சு.பிரேமச்சந்திரன்

சுமந்திரன் ஐ.தே.கவின் ஆதரவாளரா? – சு.பிரேமச்சந்திரன்

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2018 | 9:57 pm

சுமந்திரன்  ஐக்கிய தேசியக் கட்சியின் நெருங்கிய ஆதரவாளராக செயற்படுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிடுகின்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் நீதித்துறையில் விசாரணை நடத்தலாம் என்ற சிந்தனை கூட சர்வதேச சமூகத்திற்கு வரக்கூடிய அளவிற்கு  நீதித்துறை சம்பந்தமான புகழாரங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுத்து காண்பிக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட பிளவு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் அறிவிக்கும் வரை பொதுச் சின்னம் எடுப்பது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்த ஆர்வமும் காட்டவில்லை எனவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது ,  பிரச்சார நோக்கத்திற்காக தமது சின்னத்தில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்