2,31,229 புதிய வாக்காளர்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

2,31,229 புதிய வாக்காளர்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

2,31,229 புதிய வாக்காளர்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2018 | 4:22 pm

Colombo (News 1st)  இம்முறை 2,31,229 புதிய வாக்காளர்கள், வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,59,92,096 ஆகும்.

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களுக்கும் இந்த புதிய வாக்காளர் இடாப்பு செல்லுபடியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வாக்காளர்கள், தமது பதிவினை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிடவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்