ரணிலுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாக சிறிதரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2018 | 9:10 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழ் ​தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்புகளில் தமது பூரண ஆதரவை வழங்கியது.

அண்மையில் பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தது.

இந்நிலையில், ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டத்தில் வாக்களித்திருக்கின்றோம். ரணில் விக்ரமசிங்க தான் பிரதமராக இருந்திருக்கின்றார். இப்போது எங்களுடைய ஆதரவின்றி ஒரு அரசாங்கம் இருக்க முடியாத நிலைமை வருகின்ற போது, மிகப்பெரிய அழுத்தங்களைக் கொடுத்து பல விடயங்களை நாங்கள் செய்து முடிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையிலே தான் அந்த ஆதரவைக் கொடுக்கின்றோம். அந்த நம்பிக்கை தளர்கின்ற பட்சத்தில், அதை அவர்கள் செய்யத் தவறுகின்ற பட்சத்தில் நிச்சயமாக எங்களுடைய ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு அந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம்.

என அவர் மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்