முன்னரை விட அதிக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

முன்னரை விட அதிக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2018 | 6:12 pm

Colombo (News 1st) ஊழலை ஒழித்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முன்னரை விட அதிக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

தேசத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துக் கொண்டு அவருடை கருத்துக்களை ஏற்று, அவருடன் வலுவானதொரு அராசாங்கத்தை உருவாக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரதமர் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையை நியமிப்பதற்கு சில நாட்கள் தேவைப்படும் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த மூன்றரை வருடங்களைப் போல் அல்லாது, விரிவான எண்ணத்துடன் மக்களுக்கான புரட்சி மிகு சேவைகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்