நெற்சந்தைப்படுத்தல் சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கான விலை நிர்ணயம்

நெற்சந்தைப்படுத்தல் சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கான விலை நிர்ணயம்

நெற்சந்தைப்படுத்தல் சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கான விலை நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2018 | 4:59 pm

Colombo (News 1st) நெற்சந்தைப்படுத்தல் சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ பச்சையரிசி 83 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 வாரங்களில் இந்த அரிசி வகைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அடுத்த மாத இறுதிக்குள் கொள்வனவு செய்வதற்கும் நெற்சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

இம்முறை 1,75,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்