இம்ரான் கானின் சகோதரிக்கு 29.5 மில்லியன் அபராதம்

முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிக்கு 29.5 மில்லியன் ரூபா அபராதம்

by Bella Dalima 14-12-2018 | 5:11 PM
வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானுக்கு 29.5 மில்லியன் (இந்திய) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கு மிக்க 44 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஐக்கிய அரபு அமீரகத்தில் அலீமா சொத்து வாங்கியது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று (13) நடைபெற்ற விசாரணையில், அமீரகத்தில் அலீமா பினாமி சொத்து வாங்கியதால், அவருக்கு 29.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருவாய் வாரியம் தெரிவித்துள்ளது.