மஹிந்த ராஜபக்ஸ  பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் 

மஹிந்த ராஜபக்ஸ  பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் 

எழுத்தாளர் Bella Dalima

14 Dec, 2018 | 7:10 pm

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை (15) தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அந்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினம் நாட்டு மக்கள் முன்னிலையில் விசேட உரை ஆற்றியதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்