20 மில்லியன் ரூபா மோசடி: உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

20 மில்லியன் ரூபா மோசடி: உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

20 மில்லியன் ரூபா மோசடி: உதய கம்மன்பிலவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2018 | 5:41 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷி மகேந்திரன் இன்று இந்த வழக்கை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

போலி சட்டத்தரணி அனுமதிப் பத்திரமொன்றை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் இதுவரை மேல்நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் இடம்பெற்று வந்ததுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் அவர் முன்னிலையிலேயே இடம்பெறுவது சிறந்தது என தீர்மானித்து மேல் நீதிமன்ற நீதிபதி ஷஷி மகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்