ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளரின் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணம் பறிமுதல்

ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளரின் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணம் பறிமுதல்

ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளரின் வீட்டிலிருந்து 59 இலட்சம் ரூபா பணம் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2018 | 3:40 pm

Colombo (News 1st) 231 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட ட்ரோலர் படகின் உரிமையாளரின் பேருவளையில் உள்ள வீடு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 59 இலட்சம் ரூபா பணம் மற்றும் செய்மதி தொலைபேசிகள் இரண்டு சந்தேகநபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருவளை – மொரகல்ல, கொடெல்ல பகுதியைச் சேர்ந்த துலிப் சமந்த சில்வா எனப்படும் 44 வயதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளை படகொன்றில் கொண்டுவந்த ​போது சந்தேகநபர்கள் இருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்