வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2018 | 9:25 pm

Colombo (News 1st) வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய வளர்முக அணிகள் நாளை மறுதினம் (15) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

வளர்முக அணிகளுக்கிடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை, பங்களாதேஷ் வளர்முக அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதின.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்முக அணி 49.1 ஓவரில் 237 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

மிஷானர் ரஹ்மான் 72 ஓட்டங்களையும் யசிர் அலி 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 238 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை வளர்முக அணி 20 ஓவர்களில் 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

சந்துன் வீரக்கொடி 47 ஓட்டங்களைப் பெற்றதுடன், கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இலங்கை வளர்முக அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.

இதேவேளை, மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வளர்முக அணியை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட இந்திய வளர்முக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கொழும்பு CC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் வளர்முக அணி 44.4 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பதிலளித்தாடிய இந்திய வளர்முக அணி 27.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை அடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்