மலையகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றன

மலையகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றன

மலையகத்தில் போராட்டங்கள் தொடர்கின்றன

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2018 | 9:29 pm

Colombo (News 1st) சம்பள அதிகரிப்பு கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொட்டகலை – ஸ்டொனிகிளிப் தோட்ட மக்களும் ஹட்டன் – ஸ்டாடன் தோட்ட மக்களும் ஹட்டன் – கெரோலினா தோட்ட மக்களும் இன்று சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்டாரவளை – தம்பதென்ன தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

யட்டியந்தோட்டை – மணல்பொல தோட்டத் தொழிலாளர்களும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மெராய தோட்ட மக்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், மன்றாசி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோல்ப்ரூக் – சின்ன தோட்ட மக்கள் டயர்களை எரித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்