சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்

அமைதியாகக் கலைந்துசெல்லுமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 12-12-2018 | 7:48 AM
Colombo (News 1st) இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று (12) நிறைவடையவுள்ளது. பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அமைதியாகக் கலைந்துசெல்லுமாறு பரீட்சார்த்திகளை, பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பரீட்சை நிறைவடைந்த பின்னர் பரீட்சை நிலையங்கள் அல்லது பரீட்சை நிலைய வளாகத்தில் மோதலைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம், பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை நிலைய வளாகங்களிலும் பொலிஸ் ரோந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.