மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை: முதல்வர் நியமனம் தொடர்பில் ஆலோசனை

by Bella Dalima 11-12-2018 | 9:04 PM
இந்தியாவின் 5 மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கான வெற்றி என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இன்றிரவு சுமார் 8 மணி நிலவரப்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த்தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை குழுக்களின் ஆதரவுடன் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை காங்கிரஸ் தலைமை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்வது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் ஆரம்பமாகி, நடைபெற்று வருகின்றது.