by Staff Writer 11-12-2018 | 8:43 PM
Colombo (News 1st) புரவெசி பலய அமைப்பின் பிரதிநிதியான சமன் ரத்னப்பிரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
நாட்டிற்குள் மோதல் உருவாகும் வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சமன் ரத்னப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் பிரதம செயலாளர் உபுல் நிஷாந்த செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய இந்த கருத்தினை வெளியிட்டதாக உபுல் நிஷாந்த பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த முறைப்பாட்டினை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் இன்று முறைப்பாட்டாளரிடம் விரிவான வாக்குமூலத்தையும் மேலும் சில வாக்குமூலங்களையும் பதிவு செய்ததன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச பிரகடன சட்டம் மற்றும் குற்றவியல் சட்டக் கோவைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.