by Staff Writer 11-12-2018 | 3:41 PM
Colombo (News 1st) தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதி ஷஷி மஹேந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் முதல் சாட்சியாளருக்கு குறித்த தினத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சாட்சியாளர்களையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்து அழைப்பாணை விடுக்குமாறும் மேல்நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.