தம்புளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறி, பழங்கள் வீண் விரயமாவதைத் தடுக்க நடவடிக்கை

தம்புளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறி, பழங்கள் வீண் விரயமாவதைத் தடுக்க நடவடிக்கை

தம்புளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறி, பழங்கள் வீண் விரயமாவதைத் தடுக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2018 | 5:16 pm

Colombo (News 1st) மரக்கறி மற்றும் பழங்கள் வீண் விரயமாவதைத் தடுக்கும் வகையில், தம்புளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் இரண்டு குளிரூட்டல் தொகுதிகளை அமைப்பதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

5 ஆயிரம் மெட்ரிக் தொன் மரக்கறி மற்றும் பழங்களை களஞ்சியப்படுத்தும் வகையில் குளிரூட்டல் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இதன் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்