by Staff Writer 11-12-2018 | 3:29 PM
Colombo (News 1st) காணாமற்போன மற்றும் திருடப்பட்ட தொலைபேசிகள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் விசேட இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
www.ineed.police.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாடு முழுவதும் 24 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதுடன், நாளாந்தம் 800 முதல் 1000 கையடக்கத் தொலைபேசிகள் காணாமற்போவதாக முறைப்பாடுகள் பதிவாவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் கிடைக்கும் முறைப்பாடுகள், அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.