25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது Yes FM

25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது Yes FM

25ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது Yes FM

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2018 | 8:35 pm

Colombo (News 1st) நாட்டின் முதற்தர ஆங்கில வானொலி சேவையான Yes Fm இன்று (10) தனது 25 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.

​1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி Yes Fm இலங்கை வானொலி துறையில் தடம்பதித்தது.

சமகால இசையை இளம் இசை இரசிகர்கள் வசம் கொண்டுசேர்த்த Yes Fm அவர்களை தம்வசம் ஈர்த்துக்கொண்டது.

சாதாரண வானொலிகளை மிஞ்சிய வகையில் கடந்த 25 வருடங்களாக இசைப்புரட்சி நடத்திவரும் Yes Fm, எம்.எல்.ரீ.ஆர், மைக்கல் போல்ட்டன் மற்றும் வெங்க போய்ஸ் போன்ற புகழ்பூத்த மேலைத்தேய இசைக்குழுக்களின் இசைப்படைப்புக்களையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டுசேர்த்தது.

இலங்கை வானொலி வரலாற்றில் ஆங்கிலம் பேசும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக முதற்தரத்துடன் திகழும் யெஸ் எப்.எம். ரசிகர்களுக்கு இசையை மட்டும் வழங்காது தகவல்களையும் கொண்டுசேர்க்கும் ஊடகமாக பரிணமித்தது.

யெஸ் எப்.எம். தனது 25 ஆவது பிறந்ததினத்தை எச்சலன் சதுக்கத்தில் இன்று கொண்டாடியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்