ஹொரன - கொழும்பு வீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

ஹொரன - கொழும்பு வீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 10-12-2018 | 4:25 PM
Colombo (News 1st) ஹொரன - கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 120 ஆம் இலக்க சொகுசு பஸ் உரிமையாளர்கள் இன்று (10) சேவையிலிருந்து விலகியுள்ளனர். காலை மற்றும் மாலை வேளைகளில் இலங்கை ​போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த பஸ் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.