முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2018 | 2:13 pm

Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், இதுவரை தீர்ப்பு எழுதப்படாத காரணத்தினால், அதனை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

வடமாகாண அமைச்சர் பதவியை பா. டெனீஸ்வரனுக்கு வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் சி வி விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தாக்கல் செய்யப்ப்டடது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும், வடமாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்