பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2018 | 1:54 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இன்று (10) ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில நியூஸ்பெஸ்டடுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு முன்னர், பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இடையில் இன்று காலை 8 மணியளவில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், அதனால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்