ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த திலின பண்டார தென்னகோன்

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த திலின பண்டார தென்னகோன்

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த திலின பண்டார தென்னகோன்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2018 | 2:46 pm

Colombo (News 1st) மத்திய மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் திலின பண்டார தென்னகோன், இன்று (10) ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கட்சியின் அங்கத்துவத்தை அவர் பெற்றுள்ளார்.

திலின பண்டார தென்னகோன், 2012 ஆம் ஆண்டு மே மாதம் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் மருமகனாவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்