பிரான்ஸில் வலுப்பெறும் எதிர்ப்புப் போராட்டம்

பிரான்ஸில் வலுப்பெறும் எதிர்ப்புப் போராட்டம்

by Staff Writer 09-12-2018 | 9:41 AM
பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தியுள்ளனர். அதேநேரம், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 பேர் வரையில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களில் 126 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆனால், யாரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் பாரிஸ் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜனாதிபதி இமானுவேல் மெகரோன் அரசாங்கம் எரிபொருள் மீது விதித்த வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், வன்முறைப் போக்குடைய சிலரால் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக பிரெஞ்ச் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.