சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-12-2018 | 6:24 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரிமாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 02. மத்தியவங்கியின் முறிகள் மோசடி தொடர்பான முழுமையான அறிக்கையை இன்னும் சில தினங்களில் வௌியிடவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். 03. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சுமார் 8,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 04. நாட்டில் இரத்ததான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது. 05. ரயில் மார்க்கத்திற்கு அருகில் காட்டுயானைகள் நடமாடுவது குறித்து, குறுந்தகவல்கள் மூலம் சாரதிகளுக்கு அறிவிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. 06. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தியாவின் ஜம்முகாஷ்மீரில் பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். 02. சந்திரனின் தொலைதூர பகுதிகளை ஆய்வு செய்யும் ரோபோ ஆய்வுகலத் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளது. 03. சசிகலா நடராஜன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நேரில் ஆஜர்ப்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. அவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரராக விராட் கோஹ்லி பதிவானார். 02. இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுநராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.