அடுத்த ஆண்டிற்கு தேவையான நிதி தொடர்பில் அமைச்சு

அடுத்த ஆண்டிற்கு தேவையான நிதியைத் தடையின்றி வழங்க முடியும்

by Staff Writer 09-12-2018 | 1:13 PM
Colombo (News 1st) அடுத்த ஆண்டிற்குத் தேவையான நிதியைத் தடையின்றி வழங்க முடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிதிகளுக்கு அமைய 3 மாதங்களுக்கு நிதியை வழங்க இயலும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அந்த நிதியை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவு அமுல்படுத்தப்படுமாயின், செலவுகளுக்கான நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ஊடாக இடைக்கால கணக்கறிக்கை மூலம் நிதியை வழங்க முடியும் என செயலாளர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்குமாயின், 4 மாதங்களுக்கு அது செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள செயற்றிட்டங்களை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கான நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.