வேலைவாய்ப்பிற்கு சென்ற இலங்கையர்கள் 222 பேர் பலி

இவ்வாண்டில் மாத்திரம் 222 இலங்கை பணியாளர்கள் வௌிநாடுகளில் உயிரிழப்பு

by Staff Writer 08-12-2018 | 1:04 PM
இந்த வருடத்தில் மாத்திரம் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற 222 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மாதவ தேசப்பிரிய தெரிவித்தார். சவுதி அரேபியாவில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் மற்றும் கட்டார் நாடுகளிலும் இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். கொலை, வாகன விபத்து, திடீர் மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, இழப்பீடு பெற்றுக்கொடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் முகவர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்களுக்காக 5 இலட்சம் ரூபா வரையில் இழப்பீடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, விபத்துக்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளாகி மேலும் சில இலங்கை பணியாளர்கள் அங்கவீனமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.