சிறுவர் உரிமை மீறல் தொடர்பில் 8000 முறைப்பாடுகள்

சிறுவர் உரிமை மீறல் தொடர்பில் 8000 முறைப்பாடுகள் பதிவு

by Staff Writer 08-12-2018 | 4:24 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் சுமார் 8000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மாதாந்தம் 900-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாவதாகவும் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டார். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை, பணியாளர்களாக அமர்த்தப்படுகின்றமை உள்ளிட்ட முறைப்பாடுகளும் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது. 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.