சந்திரனின் தொலைதூர பகுதிகளை ஆய்வு செய்யும் திட்டம்

சந்திரனின் தொலைதூர பகுதிகளை ஆய்வு செய்யும் திட்டம்

by Staff Writer 08-12-2018 | 1:00 PM
சந்திரனின் தொலைதூர பகுதிகளை ஆய்வு செய்யும் ரோபோ ஆய்வுகலத் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளது. குறித்த ஆய்வுக்கலம் ரோபோ வகையில் தயாரிக்கப்படவுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சாங்' ஈ-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினூடாக, பூமியுடன் தொடர்புபடாத சந்திரனின் பகுதிகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த பகுதிகளின் நிலையான நிலத்தொடுகை, மற்றும் ஈர்ப்புவிசை தொடர்பான ஆய்வுகளையும் இது மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக சந்திரனிலுள்ள பாறைகள் மற்றும் மணல் ஆகியவற்றின் மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படவுள்ளன. லோங் மார்ச் 3B என்ற ரொக்கட்டினூடாக இந்த ரோபோ ஆய்வுக்கலம் ஏவப்பட்டுள்ளதுடன், இதன் தரையிறக்கம் குறித்து ஜனவரி மாதம் வரையில் கணிப்பிடமுடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.