காடுகளின் அடர்த்தியை அதிகரிக்க நடவடிக்கை

காடுகளின் அடர்த்தியை அதிகரிக்கும் நடவடிக்கை

by Staff Writer 08-12-2018 | 1:11 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்குப் பொருத்தமான இடங்களைக் கண்டறியும் நடவடிக்கையை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் காடுகளின் அடர்த்தியை 2030 ஆம் ஆண்டுக்குள், 32 வீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அநுர சத்துரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு 2 இலட்சம் ஹெக்டேயர் காணி தேவைப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் காடுகளின் அடர்த்தி 29.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.